அந்தி நேரம்
வெண்திரையின் ராஜகுமாரன் பணிமுடிந்து
ஓய்வெடுக்க செல்லும் நேரம்
ஆழி அலையின் பின்னால்
அமைதியாய் அடங்கும் நேரம்
விண்ணின் ராஜகுமாரி பவனி
வர தயாராகும் நேரம்..........
அவன் அங்கு மறைவது
களைப்பு போக்க ஓய்வெடுக்கவோ !
இல்லை ஆர்ப்பரிக்கும் ராஜகுமாரியை
தூரத்தில் இருந்து ரசிக்கவோ !
தெரியவில்லை ...................
நிலவின் காதலன் ஒருபுறமிருக்க
நித்தம் தன் உணரச்சியை
விடியற்காலை முதல் அடக்கி
விரிய காத்திருக்கும் அந்திமல்லி...........
வாசனயயுடன் தன் மேனிமொட்டினை
விரித்து அழகை காட்டிடுமே !
பவனி வரும் ராஜகுமாரியின்
பார்வை தான் படுவதற்கோ !
தெரியவில்லை ...................
நாழிகை மிருதுவாய் கொஞ்சம்
நகர பட்சிகளிடம் சலசலப்பு
அமைதியாய் சிறகடித்துப் பறந்தவை
அங்குமிங்கும் ஆரவாரமாய் திரிகின்றதே !
நகரும் நேரம் அறிந்து
நகர்வளமாய் பறந்து செல்கின்றதா !
இல்லை நடுவானில் நின்ற
தங்கமகனை தேடி அலைகின்றதா !
நேரமுள் சற்று நகர
நிசப்தம் எங்கும் நிலவுகிறதே !
ஆதவன் மறைந்த காரணம்
அறிந்து அமைதி ஆனதோ !
தெரியவில்லை..............
கலைந்த செவ்வானம் மறைந்து
கருப்பு கம்பளம் விரிந்ததே !
வர்ணங்கள் தெரியா இருளில்
வெள்ளிமகள் எட்டி பார்க்க
நுனியில் பூத்த பனிதுளியால்
புல்லுக்கும் தேகம் சிலிர்ந்ததே !
நிலவின் அழகை கண்டு
உரைந்து போன ஆதவன் !
ஒருதலைக் காதலனாய் ராகம்
பாடி பொழுதை கழித்தானே !