கவினரின் சொத்து
மின்னலை வெட்டுவதும்
மேகத்தை கடத்துவதும்
சந்திரமண்டலத்துக்கு பறப்பதும்
தேவதையை காண வைப்பதும்
காதலியின் கண்களை மீன்களாக
கைகளை மலர்களாக
புருவத்தை வில்லாக
இதழை மலர் இதழ்களாக
நாவலை கருவண்டாக
பெண்ணின் முகத்தை நிலவாக
இப்படி காசு கொடுக்காமலேயே
கற்பனைச் சிறகை விரித்து
தென்றல் காற்றில் மிதந்து
தமிழை தூதுவிட்டு
தன்னிகரில்லா இன்பம்
காண்பது கவினருக்கே
சொந்தமான சொத்து .