கண்கள் எழுதும் கவிதை மொழி

கண்கள் எழுதும்
கவிதைகள் ஓராயிரம்

பார்வைகளாய்
நம்மை பரவசப்படுத்தும்

ஏக்கங்களாய்
நம்மை ஏங்கவைக்கும்

கொஞ்சல்களாய்
நம்மை குளிர வைக்கும்

கண்ணீராய் நம்மை
கரைய வைக்கும்

காதலாய் நம்மை
கண்டமாக்கும்

அன்பாய் நம்மை
ஆண்டு கொள்ளும்

இப்படி
கண்களுக்கு மொழியைக்
கற்பிப்பவன் யார்?

கவிதை வடிக்க
கண்களைவிட
சிறந்த கவினன்உண்டோ ?
நம் பூவுலகில் ????????????????????

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (3-Jun-16, 4:53 pm)
பார்வை : 104

மேலே