உங்கள் வாழ்க்கையின் ஆசான் நீங்களே
போகும் போது
சுலபமாக இருக்கிறது
சாலை
# பள்ளம்
வரும் போது
கடினமாக இருக்கிறது
#மேடு
இன்று மிதிவண்டி பயணத்தில் கிடைத்த தத்துவம்
வாழ்க்கையும் சாலையும் ஒன்றே
இரண்டிலும் மேடு பள்ளம் உண்டு.
மிதிவண்டியில் எப்படி பள்ளத்தில் செல்லும் பொழுது சுலபமாக இருக்கிறதோ
அதே போல் தான் வாழ்க்கையை விட்டு போகும் போது வரும் பள்ளம் நிம்மதியை தருகிறது.
நாம் பிறந்து வந்ததிலிருந்து தொடர்ந்து வரும் மேடுகள்
நாம் முட்டி மோதி மேடேறி விட்டால்
அப்புறம் தெளிந்த நீரோடை போல் செல்லலாம்
மேடு என்று ஒன்று வந்தால் பள்ளம் வந்து தானே தீரவேண்டும்
கடினம் என்று வந்தால்
இலகு அதன் பின் இருந்தாக வேண்டும்
(உதாரணம்: மென்பொருள்)
பெயர் தான் மென்பொருள்
அதற்கு ஆகும்
நம் மூளை எனும் உயர்பொருள்
உபயோகிப்பவருக்கு
எளிதாக இருக்கவேண்டுமேனில்
நாம் அதை மிகவும் துல்லியமாக உருவாக்கிட
மக்களிடத்தில்
வேகமாக உலவிட அப்பொழுதினில் நமக்கு
உண்டாகும்
ஒரு திருப்தி.
தாய் குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது கிடைக்கும் திருப்தி
விவசாயி விளைச்சலை எடுக்கும் பொழுது கிடைக்கும் திருப்தி
தொழிலாளி சம்பாதித்து
பணம் ஈட்டும் பொழுது(பொழுதினில்)
கிடைக்கும்
நாம் வைத்த செடி மரமாகி
காய் வைக்கும் பொழுது வரும் திருப்தி
தன்னை வருத்தி
இறைவனை வேண்டி
அவர் காலடியில் விழும் பொழுது கிடைக்கும் திருப்தி
தன் பிள்ளை என்று சொல்லி பெருமைபடும் பொழுது வரும் திருப்தி
புதுக் கவிதையை கவிஞன்
பெற்றெடுக்கும் பொழுது
உன்னோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையில் நாம் இருவரும் அடைய போகும் முக்திநிலை
மிகப்பெரிய திருப்தி
வாழ்க்கையில் மேட்டை தான் நாம் எல்லோரும் விரும்புவோம்
அதே போல் நாம்(ன்) விரும்பும் பள்ளங்களும்
நிறைய இருக்கின்றன.
நான் ஒன்றிரண்டு தான் சொல்லப்போகிறேன்
ஏனெனில் யோசிக்கவேண்டுமே
மிதிவண்டியில் பள்ளத்தில்(சறுவலில்) ஓட்டும் பொழுது
இராட்டினத்திலிருந்து கீழே வரும்போது
சர்க்கஸ் விளையாடும்பொழுது
சறுக்கிவந்து மணலில், நீரில் விழும்போது
கிணற்றில் ஆற்றில் கடலில் மோட்டர் பம்பில் குதித்து ஆட்டம் போடும்பொழுது
உன்மேல்(உன்னில்= என் கணவர்) விழம்பொழுது)
சேற்றில் உருண்டு பிரண்டு விளையாடும்பொழுது
உனக்கு பதிலாய் நான் வீழும்பொழுது
உன்னோடு கை கோர்த்து நடக்கும் பொழுது கால் இடறி விழுகையில் நீ கை கொடுத்து தூக்குவாய்
என்று விரும்பி விழுகிறேன்
இறைவனின் பாதத்தில் விழுந்துகிடக்கும் பொழுது
எல்லா கடன்களையும்
தீர்த்து விட்டு மண்ணில்(சவக்குழிக்குள்) புதையும்பொழுது
அதற்குமுன் உன் மடியில் விழும்பொழுது
வீழ்ந்து கிடப்பதிலும் சுகம்
வீழாமல் இருக்க வேண்டும் நிதம்
குடித்துவிட்டு சாலையில் கூவத்தோடு குடித்தனம் நடத்தும் மனிதா
உன் குடும்பத்தின் நிலையை யோசித்தாயா
நீ இங்கே விழுந்துகிடக்கிறாய்
அங்கே வழிந்துகிடக்கிறது கண்ணீர்
நீ இங்கே போதையில் மயக்கமாகிறாய்
அங்கே பசியில் மயக்கம்
பாதை தவறிவிட்டாய் நீ
நடுக்காட்டில் தத்தளிக்கிறது உன் குடும்பம்
மதுவை குடிக்கிறாய் நீ
விஷத்தை குடிக்கிறது உன் குடும்பம்
(உன்னை திருத்த தான் எங்களுக்கு தெரியவில்லை.
நீ வரும்பொழுது
உன்னை வளர்க்க உன்தாயாக செல்கிறேன்)
போதையில் நீ உன்னை இழக்கிறாய்
மானத்தை நாங்கள் சுமக்கிறோமே!
என்ன செய்வது?
போதையில் ஊறுகாய்
நான் இல்லை உனக்கு
மசக்கை இல்லாமல்
எடுக்கிறாய் வாந்தி
என் பால் எல்லாம் காய்கிறதே என்ன நான் செய்வேன்?
போதையில் நீ உன்னை இழக்கிறாய்
போதை உன்னை இழக்கும்
பாதையை நீ மாற்று
உன் பயணம் தொடரும்
உன் குடும்பத்தின் கண்ணீர் பூவாகும்
~ பிரபாவதி வீரமுத்து