ஏன் இந்த மாற்றம்

நேரம் நசுக்கி எடுக்கிறது
காரணம் நீ அறிவாய்?

உலகம் இருளாய்
தெரிகிறது
காரணம் நீ அறிவாய்?

இரக்கமற்ற
இரவுகள்
எனை கொன்று
புதைக்கின்றன
காரணம் நீ அறிவாய்

பச்சை வயலும்
காடும் மலையும்
கடலும் காய்ந்துகிடக்கின்றன
காரணம் நீ அறிவாய்

ஏழு ஸ்வரங்களும்
ஆறடி ஆகிறது
காரணம் நீ அறிவாய்


தென்னந்தோப்பே
குயிலின் கானமே
பூக்களின் சுவாசமே
சந்தம் பாடும் காவிரியே
மரகத புல்கள்
மாணிக்க பனிமழைகள்
உலவி திரியும் சிட்டுகுருவிகள்
என்னை எழுப்பும் சேவல்கூட்டம்
உன்னை காணும் மாடப்புறா
நாம் வாழும் நந்வன தோட்டம்
யாவும் இன்று இலமே
பராபரமே

இது ஏன் சொல் சொல்
என் இறைவா...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Jun-16, 5:30 am)
Tanglish : aen intha maatram
பார்வை : 259

மேலே