மழையே

மேழியால் உழுது
தூவிய நெல் மணிகள்
பூமிப் பந்தைத் தட்டித் தகர்த்து
முட்டி முளைத்து
வெளிவரும் நாள்
ஆழியாய் நீ வந்து
அழைத்துச் சென்றாய்......


காலியாய் நிலம்
நீயின்றி
வறட்சியில் வாடும் நாள்
வாராமல் நீ தான்
பொய்த்துப் போனாய்......


வேரிலும் நீ தான்
பூவிலும் நீ தான்
இலையின் பசுமையும் நீ தான்
இயற்கையின் செழுமையும் நீ தான்
அழிவிலும் நீ தான்
ஆக்கத்திலும் நீயே தான்......


மண்ணில் விழுந்து மறைந்தும் போகிறாய்......
கடலில் விழுந்து தொலைந்தும் போகிறாய்......


நீ வரும் களிப்பில்
தோகை விரித்து மயில் நடனம் ......
உன் வரவின் நினைப்பில்
இமைகள் விரித்து மனித இனம்......

எழுதியவர் : இதயம் விஜய் (31-May-16, 10:28 pm)
Tanglish : mazhaiyae
பார்வை : 226

மேலே