விறகு வெட்டி

காய் கனிகளை
பறித்து திண்று விட்டு
கோடாரியில்
வேரை வெட்டி எடுத்தான்......


தழை கிளை வேரென
அடுக்கி வைத்து விட்டு
நடந்து வந்தான்...


சூட்டில் கால் பதித்து
வியர்வையில் குளித்து
சோர்ந்துப் போய்
அமர்ந்தான்...
மரத்தின் நிழலில்......


மரங்களின்
அருமை உணர்ந்தான்
நிழலில்
வெயிலின் தணிப்பில்
விறகு வெட்டி......



மரம் வளர்ப்போம்...
மழைப் பெறுவோம்...
மனித குளம் காப்போம்...

எழுதியவர் : இதயம் விஜய் (31-May-16, 10:10 pm)
Tanglish : viraku vetti
பார்வை : 168

மேலே