🙏இறை_பக்தி 🙏
பக்தியை வெளிக்காட்டிக்கொள்வதில்
சிலருக்கு பெருமை, சிலருக்கு சங்கடம்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற கேள்வியை விட
கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை வாழ்கிறோமா
என்பதே நமக்கு முக்கியமான இறைவழி.
நல்லவனுக்கு தாமதமாக கிடைத்தாலும் நீதியும் பெருமையும் அளவில்லாமல் கிடைக்கும், அதைப்போலவே கெட்டவனுக்கும் தண்டனையும் பாவமும் நிச்சயம் கிடைக்கும், ரூபம் வேறாக இருக்கலாம். உப்பை தின்றவன் தண்ணி குடிக்காத சரித்திரம் கிடையாது.
# சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.
# பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.
# தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.
# பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
# இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
# பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.
# செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.
# வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.
# பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது
# இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது
# ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
# மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்