காதலை தேடி-1

காதலை(லே) தேடி-1.....

கண் திறந்து கொண்டே
கனவு காணும்
வித்தையை உன்னிடமே
கற்று கொண்டேன்.....
நான் வருவேன் என்ற
நம்பிக்கையில் நீ.....
என்னை மறந்திருப்பாய்
என்ற நம்பிக்கையில் நான்.....
இரு நம்பிக்கைகளும்
முட்டி மோதி
காதலே இறுதியில் வெல்லும்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறது
நம் இரு இதயங்களும்......


சார், உங்க லக்கேஜ் எல்லாம் கார்ல வச்சிட்டேன்....உங்களுக்கு தேவையான எல்லா திங்க்சும் அதுலயே இருக்கு...உங்க மெடிசன் அப்பறம் எந்த டைம்ல எந்த டேப்லெட் போடணும்ன்ற டீடைல்ஸ் கூட அதுலயே இருக்கு....நீங்க இங்க இருந்து ஏர்போர்ட் போனதும் நம்ப ரவி உங்களோட டிக்கெட்டோட அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பான்...

.நீங்க பிளைட் ஏறி போறவரைக்கும் உங்களுக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் அவனே பாத்துப்பான்....தென் நீங்க ப்ளைட்ல இருந்து இறங்கினதும் அங்க உங்களுக்கு கைட் பண்ண ரவி மூலமா அங்க ஒருத்தர அரேஞ் பண்ணிருக்கோம்...அவர் பேரு முகம்மது ....நீங்க தங்கறதுக்கு ஹோட்டல், தென் நீங்க போக வர ட்ராவெல்ஸ் இப்படி எல்லாத்தையும் அவங்களே பாத்துப்பாங்க....

உங்களுக்கு ஏதாவது எமெர்ஜென்சியா தேவைபட்டா நீங்க முகமதையோ ரவியையோ காண்டக்ட் பண்ணலாம்...நீங்க அந்த ஊர்ல இருக்கற வர உங்களுக்கு எந்த கஷ்டமும் வராத மாதிரி எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டேன் சார்.....

வினோத் போதும்.....உன்ன பத்தி எனக்கு தெரியாதா, உங்கிட்ட ஒரு வேலையோ சொல்லாமையே அத பெர்பெக்டா முடிச்சி அதோட வெற்றிய என் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுவ...இப்போ நான் ஊருக்கு போகணும், என் கடந்த கால வாழ்க்கையோட அடையாளத்த ஒரு தடவையாவது என் கண்ணால பாக்கனும்னு ஆசைப்பட்டு கேட்ருக்கேன், நீ இதுல ஏதாவது தப்பு நடக்க விட்ருவியா..வினோத் ஒரு வேலைல இறங்கினா கண்ண மூடிட்டு அது சரியா இருக்கும்னு நான் அடிச்சி சொல்லுவேன்.....

சார் போதும், என்ன புகழ்ந்துட்டே இருந்தா நீங்க பிளைட்ட மிஸ் பன்னிடுவிங்க.....பர்ஸ்ட் நீங்க புறப்டுங்க.......

ஓகே வினோத், சொல்லனும்னு அவசியம் இல்ல, இருந்தாலும் என் கடமைக்காக சொல்றேன்.....என்னோட இந்த வெற்றி, செல்வாக்கு, கனவு, லட்சியம் எல்லாத்தையும் கலைஞ்சு போகாமா பத்திரமா பாத்துக்கோ...நான் கிளம்பறேன்...

எத்தனை வருஷங்கள விழுங்கி இன்னைக்கு திரும்ப போகறேன், என் கடந்த கால கலையாத, கலைய முடியாத நினைவுகளை திரும்ப ஒரு முறையாவது பாக்கணுமேன்ற தவிப்பு எப்படி எனக்குள்ள வந்தது....எப்படி இத்தன நாள் வைராக்கியமா அவள பத்தின தகவல கூட தெரிஞ்சிக்காம இருந்தேன், நினைக்கவே ஆச்சரியமா தான் இருக்கு...என்னோட உயிர்ல உணர்வுல மனசுல கலந்த அவள உடலாள பிரிஞ்சிருக்க முடிஞ்சதே தவிர இந்த பிரிவு ஒன்னும் உண்மை இல்லையே.........

பாக்க தான் போறேன், கிட்ட இல்லனாலும் என் கை தொடும் தூரத்துல இல்லனாலும் தொலை தூரத்துல இலை மேல விழுந்த வெண்பனி போல இருக்க அவ முகத்த தொலை தூரத்துல இருந்து பாத்து என் ஆத்மாவ ஆறுதல் படுத்திக்க தான் போறேன்.....எப்படியாவது அவல பாத்துடனுமே, கொதிக்கிற எண்ணைய போல தவிக்கிற என் மனச எப்படி சாந்தபடுத்துவேன்.....இதுக்கெல்லாம் காரணமானவள பத்தி சீக்கிரமே சொல்றேன்........

எழுதியவர் : இந்திராணி (3-Jun-16, 11:48 am)
பார்வை : 1159

மேலே