மனம் வருடும் மயிலிறகு - 4

சுமையாய் நினைத்த எனக்கு
ஏனோ...
பின்னாளில் வரவிருக்கும்
சுகத்தை அறிந்திருக்க
வாய்ப்பில்லை....!
என்னை போலவே
கண்ணீரில் நனைந்த சிலர்...
எங்களை வேடிக்கை பார்த்த பலர்...!
என் சோகத்தையும்
தன் எச்சில் மிட்டாயோடு
பகிர்ந்துக்கொண்டான்...
பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன்...!
பகிர்தலின் சுகம்
உணர தொடங்கிய காலம்
ஏனோ ...
என் சோகம் பகிர்ந்தவன்
அருகே இல்லை...!
சிலேட்டில்
கை நடுங்க....
.......அ........ஆ....
எழுதத்தொடங்கினேன்
வருங்காலத்தில் ...
என் விரலும் அதிசயம் புரியும்
என அறியாமல்....!
( வருடல் தொடரும்....)