வைகறை

வையக மாந்தர் வசந்தம் உண்ண
=வைகறை பானையில் வெளிச்சப் பொங்கல்
வைக்குது இயற்கை. வழியுது அங்கே
=வனப்பாய் மேகம். வரமெனக் கொண்டு
கைகளில் அள்ளிக் கனிச்சுவைக் உண்டு
=களிப்புற வென்று கதிரவ அழகு
நெய்யென உருகும் நேர்த்தி யிலிந்த
=நிலமது செழிக்கும் நிலையுணர் வோமே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Jun-16, 1:54 am)
Tanglish : vaigarai
பார்வை : 180

மேலே