உன் படைப்பினிலே•••

வாயில்லா ஜீவன்
தேன் குடிக்கிறது
வாயுள்ள ஜீவன் ஒரு வாய் சோற்றுக்கு
பசியால் துடிக்கிறது

கழுத்தில்லா ஜீவன் ஒரு இலைமேலமர்ந்து இவ்விலைக்கு சுமையாயிருக்கிறது
கழுத்துள்ள ஜீவன் தன் வயிற்றைக்
கழுவ ஊரார் சுமைகளை சுமக்கிறது

தலையில்லா ஜீவன் வயகாட்டு வரப்புகளை பலமிழக்கச்செய்கிறது
கழுத்துள்ள ஜீவன் கேள்வி குறிபோல் தன்னை வளைத்து அந்த பொக்கை பூரல்களை அண்டை கொடுத்து சரி செய்கிறது

இறைவா உன் படைப்பினிலே இது
அநியாய படைப்பில்லையோ

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (5-Jun-16, 4:34 pm)
பார்வை : 134

மேலே