வானத்தின் விரல் பிடித்து - 12347

வானவில்லுக்கு இறகுகள் முளைத்து
வண்ணத்துப் பூச்சியாய் அருகில் வந்தது.....

வண்ணத் தமிழ் மொழி இதயம் நிறைத்து
வளமாய் சிந்தனை அறிவில் தந்தது.....

வந்த கற்பனை கவிதை ஆனது
வருத்தம் என்பதும் இனிமை ஆனது....

வளர்ந்து பாருங்கள் வானமும் கீழே - சிந்தனை
வளர்த்துப் பாருங்கள் நீங்கள்தான் மேலே.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (5-Jun-16, 10:52 pm)
பார்வை : 194

மேலே