நெருப்பில் கிளிகள்

மண்ணுக்குள் மூடிய வேர்கள்
ஈரம் இழுத்து - முத்துப்
புன்னகை செய்கின்றதுப் பூக்களாய்......


மானிடர் தம் மனங்களின்
குணம் விதைத்து - நட்பெனும்
உறவில் கூடியிருந்தனர் புறாக்களாய்......


ஆரியம் எனும் அமிலம் வந்தது
வரணாசிரம கொள்கை புகுந்தது - ஒன்றினைந்து
வாழ்ந்தவன் வெறுத்துக் கொண்டான்......


செய்யும் தொழிலில் பேதம் வைத்து
சாதி என்ற சாயம் கரைத்து - பிணிப்
பிறவிகளாய் தள்ளி வைத்தான்......


மேல் வர்க்கம் கீழ் வர்க்கமென
புதுக் கோட்டைக் கிழித்து - நிதம்
சாதிச் சாட்டையில் அடித்தான்......


தீண்ட தகாதவனென நீர்த் தெளித்து
பிஞ்சு மனதிலும் நஞ்சு விதைத்து - தாழ்ந்த
குலமாய் விலக்கி வைத்தான்......


இருமனம் இணைந்த திருமண மேடையில்
பூக்கள் விலக நார்களின் தலை - தூக்கு
மேடையில் சாதிக் கயிற்றில் தொங்கவிடுகிறான்......


கற்கள் கொட்டி வர்ணம் தீட்டிய
ஈராலயத்தின் சிலைகள் ஒன்றுதான் - ஆனாலுமது
கீழினத்தின் கோவிலென பறை சாற்றுகிறான்......


அவனிருக்கும் தெருவைக் கடந்து
அவனியில் போகக் கூடாதென - எம்
ஜனனத்திலும் மரணத்திலும் தடையிடுகிறான்......


வீசும் காற்று பேசும் மொழி
இயற்கையின் வழி எல்லாம் ஒன்று - இதில்
சாதிகள் எவ்வாறு நுழைந்தது......


என்னிலும் உன்னிலும் ஓடுவது இரத்தமே
நிறத்திலும் சிவந்த வண்ணமே - அதில்
தாழ்வும் உயர்வும் எங்ஙனம் வந்தது......


பழம் திண்றுத் துப்பிய எச்சமாய்
ஏளனப் பார்வையில் நகைக்கிறான் - விருட்சமாய்
முளைக்கும் விதைகளென்று அறிந்திடாத மூடன்......


சாதிகள் மறைந்து சமத்துவம் மலர
புது சங்கல்பம் மேற்கொண்டு - நாளை
உலகை நன்வழிப் படுத்துவோம்......

எழுதியவர் : இதயம் விஜய் (5-Jun-16, 8:32 am)
Tanglish : neruppil kilikal
பார்வை : 81

மேலே