எத்தனை துன்பம்

கண்மூடும் நேரத்தில்
கண்மூடித்தமான பேச்சு
தீயாக சுடுகின்றது


துன்பம் மறந்து
இன்பமாய் எழும்ப
எலும்பு கூட உணராத
வார்த்தைகள் என்னை
கொள்ளுகின்றன

உண்ணும் வேளையின்
உயிரை கொள்ளும்
அளவாய் ஓசைகள்
என்னை தீண்டுகின்றன


மனதில் மலர்ந்த
உணர்வுகளை
திரட்டி
என் கனவுகளையும்
கலைத்து போன
வாழ்க்கை இது

மாலையானதும் மயக்கமான
மரணங்கள் என்னை
வாட்டுகின்றன
காரணங்கள் இன்றி


இரவுகளில் இனிமையாய்
பேசிட உறவுகளும்
இல்லை
என்னை கொள்ளாது
கொள்கின்றன
சொல்லாத உதடுகள்

தூக்கத்திலும் கூட
தூக்கி எரியப்பட்டவன்
நான்
என்னை எத்தனை பேருக்கு
தெரியும்
என் துன்பங்கள்
பகிர்ந்தபடி

எனக்கு துன்பங்களே
வராத வாழ்க்கை
வேண்டும்
என்னோடு நானாக
வாழ

எப்போது மாறுமே?
நான் நினைத்த
வாழ்க்கை!


பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (5-Jun-16, 5:50 am)
Tanglish : ethtnai thunbam
பார்வை : 86

மேலே