பேசு மனமே பேசு

வாசல் வரை வருகிறாய்
உன் கொலுசொலி காட்டிக்கொடுக்கிறது
என்னை பார்த்திடவோ என்றெண்ணும் போதே
திரும்பி வீட்டிற்குள் செல்கிறாய்..
தோல்வியின் விளிம்பில் நானே...

வார்த்தை சொல்லத் துடிக்கிறாய்
உன் முக‌பாவனை காட்டிக்கொடுக்கிறது
என்னிடம் தானோ என்றெண்ணும் போதே
ஏதும் சொல்லாமல் வாய்மூடி கிடக்கிறாய்..
துக்கத்தின் சிறையில் நானே...

அருகில் வர நினைக்கிறாய்
உன் வெட்கம் காட்டிக்கொடுக்கிறது
நானும் காதல் சொல்ல நினைக்க‌
என்னைக் கடந்தே போகிறாய்..
ஏக்கத்தின் துடிப்பில் நானே...

ஒரு நாள் அறிந்தேன் உனக்கு பேசவராது
நான் எது பேசினாலும் உன்காதில் விழாது
கலங்காதே பெண்ணே உன் வார்த்தையாய் நானிருப்பேன்
மற்றோருக்கு புரியாததும் எனக்கு புரிந்திடும்
நீ என்னிடம் உன்மொழி பேசு..அதுபோதும் நான்வாழ...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 2:02 pm)
Tanglish : pesu maname pesu
பார்வை : 526

மேலே