ஆட்சி செய்
கொற்றவனின் பிள்ளையாமே நாட்டிலுள்ளோர்
அக்கொற்றத்தில் வாழும் இங்கு பிள்ளையாவோம்
பிள்ளையவர் வயற்றில் தானும் மண்ணிறைந்து
ஆட்சிசெயும் கொடுங்கோலர் பலர் இங்குமுண்டோ
பிள்ளையவர் வயற்றில் தானும் பசி இறைத்து
தன வயற்றைப் பேணும் இந்த இழிவெதற்கு
யாம்யிட்ட ஒருவாக்கே உனதுசொத்து
அதை அறிந்துகொண்டால் வாழ்நாள்
முழுதும் செய்திடுவாய் நீ ஆட்சி
-இப்படிக்கு முதல்பக்கம்