உயிர்த்தெழுந்து உயரே பறந்திடு
காகமே! காகமே!
அதிகாலைப் பொழுதில்
இரவின் விடியலை
கரைந்து எழுப்பிடும் காகமே!
என் துன்பத்தின் விடிவுக்காக
ஒருமுறை நீ கரைவாயா!
துன்பம் கண்டு துவளாமல் மனமே
போராடும் வலிமையைத் தருவாயா!
இன்ப வாழ்வின் விடியும் வானில்
பறந்திட எனக்கொரு வழி சொல்வாயா!
அக்கா சொல்றாங்க வலிமை என்பது
வெளியே இருந்து வருவதல்ல!
உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது,
உயிர்த்தெழுந்து உயரே பறந்திடு!