காதலே

என்றும் இல்லா
திரை
எதையோ நினைத்து
தானாக விழுந்தது ....

நேற்று வரை
சலனம் இல்லை
நிம்மதியும்
தொலைய வில்லை ...
ஏனோ,
இந்த மாற்றம்...!

சிரித்திட நினைப்பேன்
நானாக
ரசித்திட நினைப்பேன்
பைத்தியம் போல ...

காதல் என்பதின்
அத்தாட்சி
எனக்குள்
கருவாகி விட்டதா ...

எதையோ தேடி
பார்க்கிறேன் ...
முகத்தினில்
ஏக்கங்கள் ....

மௌனங்கள்
இன்று
எனக்கு சுகம்
யார் சீண்டலும்
இன்றி
அவளை ரசிக்க
முடிகிறது .....

நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (7-Jun-16, 7:02 pm)
Tanglish : kaathale
பார்வை : 326

மேலே