அணையட்டும் சாதீ By dn, First Published  28 March 2016 1200 AM IST

கருவறை எதிர்கிறது சாதீயை; கல்லறையும் ஏற்பதில்லை சாதீயை ;தீக்கொழுந்து ஏற்பதில்லை சாதீயை;
சவாசிக்கும் காற்றும் ஏற்பதில்லை சாதீயை; குடிக்கும் தண்ணீரும் ஏற்பதில்லை சாதீயை;பஞ்சபூதங்கள் ஏற்பதில்லை சாதீயை;

தீயை பூவாய் நினைத்து மிதித்திடஆண்டவன் அருள் கிடைத்திடலாம்;சாதீயை பூவாய் நினைந்து மிதிக்கஅதனால் கிடைக்கும் ஒன்றுமில்லை;தீச்சட்டி நேர்த்தி கடன் செய்ய பலன்கிட்டலாம்; சாதீயை திணித்திடின்இக் கலியுகம் காலை வாரிவிட்டுவிடும்

சில்லரை பண்ணிடவே சாதீ மதங்கள்; வென்றவரை காணவில்லை இன்று வரையிலே; தின்றவரை அன்றி யாருமில்லை இருக்கும் உலகிலே;

வெளைஞ்சி முடிஞ்சது களத்துக்கு வந்தாகனும்; சிந்திய வியர்வை மனம் நிறைவை தந்தாகனும்; நல்லா வாழ்ந்து முடிச்சது கல்லறைக்கு சென்றாகனும்; சாதீ என்ற ஓதலின்றி ஊரு ஒருங்கே நின்றாகனும் ;

சாதீ சாதீ என்று சாவதை கண்டுக் கொண்டவங்க; சாதி சாதி என்று சாதிச்சவங்கள யாரு கண்டு கொண்டாங்க;
அண்ணாமல தீபம் பொல;சபரிமல தீபம் போல; கொழுந்து விட்டு எரியிது சாதீ சமயத்தீ;
அதிலே சேர்ந்து வாழ்ந்தது எத்தனை; வாழ்ந்து சோர்ந்தது எத்தனை; தீய்ந்து போனது எத்தனை; தோய்ந்து நொந்தது எத்தனை; போவப் போவது எத்தனை;

எண்சான் உடம்பு அதன் கூட வருவார் யாருமில்லை; நெலச்சி நின்னது எண்சான்உடம்புக்கு எட்டடி மண்ணே;
ஒசந்த சாதீகாரனுக்கு ஒரு தாழ்ந்த சாதீயாளோ; இல்ல ஒசந்த சாதீகாரிக்கு ஒரு தாழ்ந்த சாதீயானோ; இருமனதையும் ஓரு மனதாய் சேரவிடட்டும்;கருவறை  சாதீயை ஏற்கட்டும்; கருவுறமறுக்கட்டும்; அப்போது உலகமதைமெச்சட்டும்; சாத்தியமா இல்லையே;

காதல் கொள்வதை சமுகம் ஒருபோதும் ஏற்பதே இல்லை;கருவறையும் அந்த சமுகத்தைமதிப்பதே இல்லை;

"அணையட்டும் சாதீ" என்றே குதிகாலுக் கடியிலிட்டு; கசக்கிவிட்டு வாழ்வைவாழ தொடரட்டும்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவாதிருத்தலே நன்று என்றுசொன்னவன் சொன்ன சொல் நிலைத்துநிற்கட்டும் ஜகத்திலே.

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (8-Jun-16, 4:47 pm)
பார்வை : 79

மேலே