குடியிருக்க உள்ளம்•••

குடியிருக்க உள்ளம் தேடி
அலையாய் அலைகின்றாயே
கிடைக்கப் பெற்றாயா
ஆமாம் உள்ளம் உனக்கு
அவசரத்திற்காகவா
வாடகைக்காகவா அல்லது
சொந்தமாக்கிக்கொள்ளவா
அவசரத்திற்காக என்றால்
நான் ஒன்னும் அந்தமாதிரி
பொண்ணு இல்லை
வாடகைக்காக என்றால்
துணையில்லாத ஒருத்தி
வாடகைக்குத் தேடினால்
உலகம் சுடுசொல் சொல்லும்
சொந்தமாக்கிக் கொள்ளும்
தகுதி எனக்குள்ளதா என்று
காலம் தான் அதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டும்