என்னங்க என்னங்க

என்னங்க
எங்கயாவது சொல்ற பேச்ச
கேக்கறீங்களா?
எந்நேரமும் கேம்,
வாட்ஸ் ஆப்
சாப்பிடுங்க.....
என்னங்க
என்றே
அவள்
கண்ணீருடன்
கடைசி கட்டிலும்
என்னோடு என்று
விழுந்துவிட்டாள்
என் மீது
கடைசி இரவில்
என்னங்க
என் கையை விட்டு விட மாட்டீங்களே
(என்னங்க எந்த இடத்லயும் என் கைய
நீங்க பிடிச்சிட்டு தான் இருக்கணும்.
அது சாவா இருந்தாலும் சரிதான்.
அதல மட்டும் ஏங்க விதிவிலக்கு...
உயிரே ஒரு நொடியில போய்டுத்துங்க...
நல்ல வேள உடனே நெஞ்சு வலியில
பொட்டுனு போய்டன்.
இல்லனா கத்திய எடுத்து சதக் சதக்னு குத்திகிட்டே இருந்திருப்பன்)
என்னங்க
எனக்கு எல்லாமே நீங்க தாங்க
நீங்க இல்லாமம நான் எப்படிங்க
********************************
உன்னை தேடி
அலைவேன்
தேடலில் நீ இல்லை
என்றால்
எனை தேட வேண்டி வரும்
தேடல் நின்ற
இடத்தில் யாவரும்
பார்த்து வியந்தனர்
ஒரு உயிர்
இரு உடலையும்
தேடி சங்கமித்ததை பார்த்து
~ பிரபாவதி வீரமுத்து