அவள் சோம்பலும் அழகு தான்
இமைகளை தழுவும்,
இலைகளின்...
காலைத்தென்றலின் ஊடாக!
கீச்சிடும்! பறவைகளின்...
இசைக்கச்சேரியின் ராகங்கள்!
மொட்டுகளை ஸ்பரிசிப்பதால்...
அரும்பும் மலரென!
இமை விழித்தாள்!
என் சோழநாட்டு இளவரசி!
முகிலின் திரையினை விலக்கி!
பிரவேசித்து! பிரகாசிக்கும்!
பிறையென!
போர்வையை விலக்கி,
அழகு வதனத்தின்
அரங்கேற்றத்துடன்...
எழுந்தாள்!
என் ஏகாந்தத்தின் எழிலரசி!
வெளுத்த வெண்மேகத்தில்!
வர்ணம்பூச, வானவில்...
தூரிகைக்கரங்களை
வான்நோக்கி உயர்த்தி...
கார்மேகம் கருக்கையிலே!
உச்சிக்குளிர்ந்த்து!
வண்ணத்தோகையை
விரித்தாடும் மயில்...
நளினத்தின் சாயலாக!
சுழிவு, நெழிவாய்!
நெட்டி முறித்தாள்!
என் நேத்திரத்தின் விழியரசி!
முத்தத்தால், வெட்கப்பட்டு...
தேகம்சிவந்து,
இதழ்களை மூடும்,
தொட்டால்சினுங்கியைப்போல...
இமைகளை
இருகமூடிக்கொண்டு!
அடைக்கப்பட்ட மூங்கிலின்
துளையின் வாயிலாக தோன்றும்...
மனதை வருடும்
குழலோசைஎன...
இவள் விட்ட பெருமூச்சால்!
கானங்களின் சப்தம் நிறைந்த...
பறவைகளின் ராகக்கச்சேரியில்...
நிலவின நிசப்தம்!
கானலில் வெதும்பிய தன்
படுக்கையை சிலுசிலுக்க!
இரவுமுழுவதும்...
சலசலவென கொட்டித்தீர்த்த...
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியான!
கார்மேக கூந்தலை...
விதவிதமான மலர்கள்
சங்கமித்த பூங்கொத்தாய்!
அள்ளிமுடிந்தாள்!
அகிலத்தின் அன்பரசி!
சிவந்த கோமளத்தால்...
சித்திரை முத்தமிட்டாள்!
தேநீர் குவளையின் மீது!
இதுவே தருணமென...
மலர்களின் தேனெடுக்கும்
வண்டுகளைப்போல...
இயன்றவரை தேனை உறிஞ்சி...
பருகுகிறது தேநீர் குவளை!
தேன்குமிழங்கலான...
அவள் உதடுகளிலிருந்து!
இரவு பனித்துளிகளின்...
ஸ்பரிசத்தால்!
இதழ்கள் பிரகாசிக்கும்...
ரோஜாவைப்போல!
இன்முகத்தை பொன்முகமாக்க...
எத்தணித்தால்!
முகம் கழுவும் வாயிலாக!
தரைப்பரப்பில் கரைபுரண்டு
ஓடின! பல...
புண்ணியஸ்தலங்கள்!
இவள் வதனம் பட்டு
வழிந்த பனித்துளிகளால்!
சீர்மிகுந்து! எழில்கொஞ்சுகின்ற...
பதுக்கிய தரளங்களின் மீது!
பல் துலக்கும்
துரிகையை கொண்டு...
தங்க முலாம் பூசினாள்!
பூக்களின் புன்னகையரசி!
பொதிகை மலையில் சிந்தும்...
ஆகச்சிறந்த அருவித்துளிகளில்...
எழில்மிகுந்து! பொழில்கொஞ்சும்!
தேகத்தில், தேங்கிய சோம்பலை
நீராட ஆடைகளை............
திடீரென! குறுக்கிட்டு ஒலித்தது...
அவள் மாமியாரின் குரல்?
டேய்! மணி பத்தாவுது இன்னும்
தூங்கிட்டிருக்க எரும!
ஏந்திருச்சி காப்பிய குடிடா!
மூதேவி!