இப்படி தான் போயிட்ருக்கு நாடு

மதிகெட்ட மானுடா
நம் நாடு என்ன
குப்பை தொட்டியா


தடை செய்யப்பட்டவைகளும்
காலாவதிகளும்
இங்கே கொட்ட

முப்போகம் விளைந்த மண் இன்று
வறண்ட பாலையாய்
வாய்க்கால் வரப்புகளில்
எட்டிப்பிடித்து விளையாடிய நீர்
கானலாய்

இது எல்லாவற்றிற்கும்
காரணம்
திட்டமிடாததே

எதை வேண்டுமானாலும்
நம் நாட்டில்
விற்றுவிடலாம்
ஏமாந்த மக்கள்
என்கிறது
கார்பரேட் கூட்டம்

நாம் நன்றாக
இருக்க வேண்டுமென்றால்
நாடு நாசமானால்
நமக்கு என்ன
என்கிறது
வியாபாரமும்
அரசியலும்

காக்கை போல்
நாமும் நாவறண்டு
கிடக்கிறோம்
அதற்காகவாவது
கொஞ்சம் நீர்
கிடைத்தது
நமக்கு அதுவும் இல்லை
இப்படியே போனால்


நம் கேழ்வரகை ஏற்றுமதி செய்கிறோம்
மாற்றாக
பிளாஸ்டிக் உணவுகளை இறக்குமதி செய்கிறோம்

நம் நாட்டில்
இல்லா செல்வமா
மொழியா
மருத்துவமா
கல்வியா
அறிவா
ஏன்
அவ்வடையாளங்களை
தொலைக்கிறோம்

வாழ தேவையானது
நீரா ? பணமா?

சுவாசிக்க தேவையானது
காற்றா? நச்சு வாயுவா?

உண்ண தேவையானது
இயற்கை உணவா?
செயற்கை உணவா?

பயிரிட நிலமா?
வேதி பொருட்களை சுமக்க நிலமா?

நீர் குடிக்கவா?
ரசாயனத்தில் கலக்கவா?

கடல் இயற்கை அன்னையின் கைவண்ணமா?
செயற்கைகள் கொட்டப்படும்
குப்பை தொட்டியா?

வானம் மழை பொழியாதா
தவிப்பு விவசாயிக்கு
மழை ஏன் வந்தது
வெறுப்பு
மட்டைபந்தாட்டத்தில் ஊறிபோன
மகனுக்கு
இப்படி தான் போகிறது நாடு......

நேற்று இயற்கையை நேசித்தோம்
இன்று பணத்தை நேசிக்கிறோம்
நாளை பஞ்சத்தை (இயற்கை பஞ்சம், அன்பு பஞ்சம் , ....இன்னும் அதுக்கும் மேல) நோக்குவோம்

நான் என்னத்த சொல்ல
இன்னும் இருக்குது
இன்னைக்கு இது போதும்
வாய் வலிக்குது
நான் நாளைக்கு வாரன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Jun-16, 8:05 am)
பார்வை : 176

மேலே