மழையே மழையே

முத்து முத்தாய்க் கொட்டும் மழையே ...
எனை முத்தமிடவே வாராய் நீயே...
துள்ளித் துள்ளி ஆடும் அலையே...
சிறுதுளி பெருவெள்ளம் நீயே......


தூரல் போடும் அழகில் நீ
மனதில் கீறல் போடுகிறாயே...
சாரல் என்றப் பெயரில் நீ
எனைத் தேடி அலைகிறாயே......


சாலையில் நிற்கிறேன் வா மழையே
கட்டித் தழுவி நனைத்திடு
இந்த மையல் கொண்ட மேனிதனையே......

முத்து முத்தாய்......

கருங்குயில் மேகமாய் வந்து
வண்ண மயில் தோகை விரித்தாய்...
சாவிகளின் சாயல் கொண்டு நீ
நீந்தும் கயல் வீட்டினில் நுழைந்தாயே......


இளவேனில் காலம் தோழனாய் தோன்றி
நிலமகளின் சாபம் தீர்த்தாயே...
மண்ணில் மறைந்த வேருக்கும் சென்று
நிழல் மரங்களின் தாபம் தகர்த்தாயே......


மலர்களின் மடியில் விழுந்து
மழலையாய் தவழ்ந்த நீ
மதுகரம் விரும்பும் மதுவும் ஆனாயே......

முத்து முத்தாய்......

உன் பாதம் பதித்த பழுப்புச் சோலைகள்
பச்சை நிறச் சேலைப் பூணுதே...
உன்னைக் காணாது கண்களும்
நின்னைப் போன்று ஆனதே......


உன் ஒற்றைத் துளிப் பார்த்து
உலகம் சுருங்கிப் போனதே...
என் நெற்றியில் உருளும் துளிகள்
நெஞ்சின் மீது கோலமிடுதே......


அள்ளித் தரும் வள்ளலே
சொல்லில் அடங்காதச் செல்வமும் நீயே
உன்னால் தானே பூமியும் இயங்குதே......

முத்து முத்தாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (10-Jun-16, 6:03 pm)
Tanglish : mazhaiyae mazhaiyae
பார்வை : 414

மேலே