இன்று முதல் - நேற்று வரை

உடலுண்டு
உயிருண்டு
என எண்ணமுண்டு
நேற்று வரை...

வினாவுண்டு
விடையுமுண்டு
என விளக்கமுண்டு
நேற்று வரை...

வானுண்டு
வான்மதியுண்டு
என குளிர்ச்சியுண்டு
நேற்று வரை...

நிலமுண்டு
பொழியும்நீருண்டு
என நிம்மதியுண்டு
நேற்று வரை...

வினாக்களாயிரமுண்டு
விடைகளிளோயமைதியுண்டு
என விவரமில்லை
இன்று முதல்...

ரா நவீன் குமார்

எழுதியவர் : ரா நவீன் குமார் (11-Jun-16, 10:32 pm)
பார்வை : 112

மேலே