உங்கள் நண்பன்
துவைத்து போட்ட துணிகள் எல்லாம்
சில மணித்துளிலே காயும்
குளித்துபோட்ட சட்டை ஏனோ?
இன்னும் காயல ?அது -ஏனோ இன்னும் விளங்கல?
பனிமழையும் விடாத அடைமழையுலும்
துணிவென பணிபுரிந்தோம்
சுட்டெரிக்கும் சூரியனும்
எங்கள பார்த்து அஞ்சும்
எங்கள் மீது வேர்வையை மழையாக தூவும்
எங்களுக்கும் உண்டு குடும்பம்
எங்கள பார்க்க நாதியில்ல
கை நிறைய காசு இருக்கும்- ஆனா சாப்பிட நேரமில்ல
கிடைக்கும் இடத்தில் சாப்பிடுவோம்
கண்ட இடத்தில் தூங்குவோம் -நாயப்போல
பணி என்றால் புறப்படுவோம்
சுறுசுறுப்பான -தேனீ போல
இரவரியா பகலரியா நட்சத்திரம் நாங்கள்
இரவென்றால் சொளிப்போம்
பகலென்றால் மிளிர்வோம்
எங்களுக்கும் தூக்கமில்ல
காக்கையும் நாங்களும் ஒன்றுகூடுவோம்
ஆனால் பகிர்ந்துண்டதில்ல
எங்களுக்கு உண்டு மக்கள் சேவை
மகேசன் சேவையென- அதை சிறப்புடன் செய்வோம்......
மதிப்புடைய சில தாளுக்காக இல்லை
எங்கள் சந்ததியாகிய
உங்களுக்காக என்றும்
உங்கள் நண்பர்களாக ...........!