சோதனை முடிந்தது

தன் பசியாற்றிய தாயின் பசி தீர!

நாளும் கல்லுடைத்து
நடுநிசையில் வீடு வரும் அப்பனுக்கு
-ஓய்வு ஒன்று தந்திடவே!

உத்தமன் ஒருவன் கையில் ஊரார் மெட்சிக்க
உடன் பிறந்தவளை கொடுத்திடவே!

தமயனவன் பத் இரண்டுக்கு மேலே
பல்கலையை பார்த்திடவே!

பரிதியவன் புழுதியிலே
வீரம் காட்டும் வேளையிலே!

திறம் முழுதும் தீர்த்து
நட்சத்திரங்கள் நான் வாங்கி.

பத்து வரை பாடப்புத்தகம் இலவசம் என்பதாலே!
பலமுறை படித்து பரிசைலே தேறி நின்றேன்.

மருத்தவ சோதனையிலே
வென்று நானும் வெளிவரும் வேளையிலே!
மிச்ச சோறு திண்ணாலும்
உச்சமில்லா பெத்தபுள்ள எம்புள்லன்னு
என் ஆத்தா பெருமிதமா பேசினாலே!

மொத்த சோதனையும் முடித்துதானே
தேர்வில் வெற்றிகண்டேன்.
இனி சோதனை இருக்காது வாழ்விலென
காக்கி சட்டை தனை
கௌரவமா நான் பூண்டேன் .





தொடரும் ...

எழுதியவர் : ராமகிருஷ்ணன் வெ (12-Jun-16, 9:41 pm)
பார்வை : 77

மேலே