தமிழ் தாய்

தமிழுக்கு அமிர்தம் ஊட்டிய
என் தமிழ் தாயே
உன்னழகை இரசிக்காதவன்
குருடன்தானே
அவன் ஊமையாய் ஆனது ஏன்?

யாதும் ஊரே யாவரும் கேளீர் -என
சொல்லொன்று சொன்னானே
அந்த பூங்குன்றனாரை மறக்கலாமா - நீ?

என் தமிழ் தாய்க்கு ஈடாய்
இப்பாருக்குள் உண்டா
இலக்கணம் மிக்கதோர் மொழி ?
அதனை போற்ற நீ மகிழ வேண்டாம்
பிழையின்றி நீ பேசினாலே போதும்

பன்மொழிப் புலமைப் பெற்ற
பாவேந்தர் பாரதியார் போன்ற
மகாக்கவிஞன் கண்டு கூறினானே
இப்பாருக்குள் ஈடு இணையற்ற
ஓர் செம்மொழி என் தமிழ் மொழி

என் தமிழ்தாய் மொழியை
ஆண்டோரும், மூத்தச் சான்றோரும்
புகழ்பாடிச் சென்றதை
நான் இன்று பேசாதிருந்து
மங்கச்செய்தல் ஆகுமோ?

இன்பத் தமிழன் என்னை
என் தாய் படைத்து ஏன்?
முத்தமிழை தினம் வளர்க்கத்தானே!
நான் இல்லையென்றாலும்
தானாய் வளரும் அற்புதத்தருதான்
ஒண்டமிழ் என் தண்டமிழ்!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Jun-16, 10:49 pm)
Tanglish : thamizh thaay
பார்வை : 235

மேலே