காதல் கவிதைகள் நீ ----நாவல் தோழி சாந்தா தேவி -படித்த கதை --
காதல் கவிதைகள் நீ!
Chapter 1:
இளங்காலை பொழுது , கதிரவன் வானில் வட்டமிட பனி மெல்ல மெல்ல விலக ஆரம்பித்திருந்தது . எப்பொழுதும் போல 5.30க்கு எழுந்தவன் சிந்தைனையில் இந்த நாள் எப்படி இருக்கபோகிறதோ என்ற எண்ணம் அதிகமாக ஆகிரமித்திறந்தது. இது நெடுநாட்களாக காணப்போகிறோம் என்ற நிம்மதியா அல்லது ஏன் இவ்வளவு லேட்டாக விடிகிறதோ என்ற ஆர்வமா தெரியவில்லை. ஆனால் இன்று தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக இருக்கபோவதை அவன் எதிர்பார்க்கவில்லை.
கீர்த்தி, என்னடா பண்ற எழுந்து வர இவ்வளவு நேரமா உனக்கு என்ற தாயின் குரலில் தன்னிலை உணர்ந்தவன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து , சார்ரிமா இன்றைய வேலைகளை நினைத்து கொண்டு நின்றுவிட்டேன். 5நிமிடத்தில் கீர்த்தி ரெடி என கூறிவிட்டு குளியலறை நோக்கி விரைந்தான்.
இவனுக்கு என்னதான் ஆனதோ , இப்படி வாழ்வில் வேலை வேலை என்று எண்ணுகிறானே தவிர ஒரு நாள் கூட திருமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை ,ஒரு வேலை படிக்கும் காலத்தில் யாரையாவது விரும்பி அவள் இவனை நிராகரிதிருப்பலோ என்று தன் மனம் போன போக்கில் தாயாக என்னிகொண்டிருந்தவலை கேசவனின் குரல் கலைத்தது.
சாரதா காபி ரெடியா,என்ன பண்ற இன்னும் , என்ற கணவனின் குரல் இடைமறிக்க , அவரை பார்த்து இதோ இரண்டு இரண்டு நிமிடங்கல்ங்க வந்துட்டேன் என்று தன் எண்ணங்களை ஓரதள்ளி அன்றாட வேளைகளை கவனிக்க ஆரம்பித்தால் அவள். .
அம்மா!, இன்று எனக்கு முக்கிய வேலைகள் இருக்கு ,சோ நான் கிளம்புறேன்மா, என்ற பிள்ளையை நிமிர்ந்து பார்த்தவளுக்கு முன்பு நாம் எண்ணியது தவறோ என்றிருந்தது . அழகிய நீல வண்ண நிறத்தில் டெரிகாட்டன் ஷிர்ட்டும் ப்ளாக் ஜீனும் அவனுக்கு அருமையாக பொருந்திருக்க, .இவனையா ஒருத்தி வேண்டாம் என்று சொல்ல போகிறாள்
என்று மனதில் நினைத்துகொண்டு, வா டா கீர்த்தி கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கிளம்புவதால் ஒன்றும் ஆகிவிடாது என 2தோசைகளை எடுத்து டேபிளில் எடுத்து வைத்தால் அவள்.
அம்ம்மாவுகாகவது சாப்பிட்டு கிளம்புப்பா கீர்த்தி என்ற கேசவனின் குரலில் சரிப்பா என்று அவசர அவசரமாக டிப்பனை முடித்து விட்டு கிளம்பிவிட்டான்.
தான் சிறப்பாக பயின்ற கார் டிர்ய்வின்கினால் காரை நன்றாக ஓட்டினாலும் நினைவு முழுவதும் நேற்று அவளிடம் பேசிய போன் காலிலேயே இருந்தது.
முந்தைய நாள் வழக்கம் போல அலுவலக வேலைகளை ,முடித்துவிட்டு அம்மா அப்பாவிடம் பேசி சிரித்துவிட்டு தன் அறைக்கு சென்றவனுக்கு அவளிடம் இருந்து வந்த போன் கால் ஆச்சர்யத்தின் உட்சிகே கொண்டு போனது.
என்னதான் அவளை மறந்து விட்டேன் என்று மனதில் நினைத்தாலும் எண்களை மொபைலில் பார்த்ததுமே கண்டுபிடுத்து விட்டான் அவள் தான் என்று , .ஆனால் இவளிடமா மறுபடியும் பேசவேண்டும் என்று'மனம் முரண்டினாலும் போனை அட்டென் செய்ய கைகள் தடுக்கவில்லை.
வேண்டுமென்றே போன் காலை அட்டென் செய்தவன் தெரியாத நம்பர் போன்று ஹலோ கீர்த்தி ஸ்பீகிங் யார் என தொடங்கினான்.
அடுத்த முனையில் சவுண்ட் இல்லாது போக மனதில், அனுபவிக்க வேண்டியவள் தான் என நினைத்து கொண்டு வேண்டும் என்றே ஹலோ யாருங்க பேசுறது என சத்தமிட , அவள் நா... நா... கவிதா பேசுகிறேன் என பேசமுடியாமல் தவித்தவளை வேண்டும் என்றே கேலியாக கவிதானா யாரு , சரியா நியாபகம் இல்ல, யாரு நீங்க , என்ன வேணும் உங்களுக்கு என்று அலட்சியமாக வினவினான்.
ஒரு நிமிடம் அடுத்த முனையில் கண்ட அமைதியில் மனதில் மறுபடியும் சின்ன சந்தோசம் தோன்ற மறுபடியும் , ஹலோ யாருங்க நீங்க , எனக்கு ஆயிரம் வேலை இருக்கு கொஞ்சம் விளக்கமா சொன்ன நான் கால் கட் பண்ணவேண்டிருக்காது என்று விரட்டாத குறையாக கூறியவனை இடைமறித்தது கவிதாவின் குரல்.
எஸ், நான் கவிதா உங்ககூட காலேஜ்ல ஒன்னா படிச்ச உங்க கிளாஸ்மேட், என்று தொடங்கிவளை , சோ வாட் என்ற அவனது குரல் தடுத்தது.
அடுத்த முனையில் மீண்டும் அமைதி காணவும் இப்படிதானே ஒரு காலத்தில் நான் தவித்தேன் அனுபவிக்கட்டும் என்று சந்தோஷ பட்டு கொண்டே , சோ வாட் சொல்லுங்க என்றான்.
நான் உங்களிடம் கொஞ்சம் முக்கியமான விசயமாக நேரில் பேசவேண்டும், சோ ப்ளீஸ் ஒரு 30மினிட்ஸ் எனக்காக ஸ்பென்ட் பண்ணுங்க என்றவளிடம் , யாருனே தெரியதவங்கல்ட்ட 30மினிட்ஸ் பேசுற அளவு நான் ப்ரீ இல்ல , சோ நான் கால் வைக்குறேன் என்று கட் செய்ய போனவனை அதிகாரமாக தடுத்தது கவிதாவின் குரல்
ஹலோ மிஸ்டர் நான் பேசணும் சொன்னது நம்ம விஷயம் பற்றியல்ல , அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள், நாளை காலை உங்களை நேரில் சந்திக்கவேண்டும் அவ்வளவு தான் , எங்கு என்று சொன்னால் நான் வர சுலபமாக இருக்கும், சோ அதுக்கும் மட்டும் பதில் சொன்னால் போதும் , அதைவிட்டு யாரோ உங்கள்'காலில் விழுந்து கெஞ்சபோகிறேன் என்று கூறியமாறியல்லவா அதிகமாக பேசவேண்டாம் என்று பேச்சை முடித்தாள் அவள்
அதானே இந்த திமிர் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட கொறையவில்லை என்று மனதிற்குள் பொறுமியவன் சரி நாளை காலை 11,மணிக்கு ஆபீஸ் வந்துடுங்க,அங்கே பேசலாம் , மை ஆபீஸ் அட்ரஸ் என்று தொடரபோனவனை ,தெரியும் நாளை சந்திக்கலாம் தாங்க்ஸ் என்று கூறிவிட்டு காலை கட் செய்து விட்டாள் அவள்.
என்ன ஒரு திமிர் வரட்டும் எப்படியும் நாளை காலை பார்க்கதானே போகிறோம் , அப்பொழுது சேர்த்து கொடுத்து விட்டால் போகிறது
அருகில் ஒலித்த ஹாரன் ஒலியில், நிகழ் காலத்திற்கு'வந்தவனுக்கு ச்ச!, இவ்வளவு நேரம் இவளை பற்றியா நினைத்து கொண்டிருக்கிறோம் என்று தன்னையே நொந்தவன் , அவள் பற்றிய எண்ணங்களை ஒதுக்கிவிட்டு ஆபீஸ்சிற்கு விரைந்தான்.
அங்கு, இரவு போனை வைத்தவளுக்கு பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு பேச்சை பாரு , என்று கோபமனவள் , அவளுக்கு போன் செய்து எல்லாம் உன்னால்தாண்டி , உன் ஹெல்ப் வேற யாரிடமாவது கேட்டு கொள்ள கூடாதா , என்று நொந்தவளை , ப்ளீஸ்!கவி என் செல்லம்ல , நீ என் பெஸ்ட் பிரன்ட்ல ப்ளீஸ் டி நீ தானே காலேஜ்இல் அவனோட பிரன்ட். நீ சொன்னா கண்டிப்பாக அவன் ஒத்துக்கொள்ளுவன் , என்று பாவமாக கெஞ்சிய பாரதியை நினைத்து என்னவோ போல் ஆகிவிட்டது
சரி என்னவோ , உனக்காக இந்த ஒருமுறை பேசபோகிறேன் , ஆனால் அதற்குமேல் நீ பார்த்து கொள்ளவேண்டியதுதான் என்று அவளிடம் கூறிவிட்டு போன் வைத்தவளுக்கு அவனை எப்படி நாளை சந்திக்க போகிறோம் , எப்படி பேசபோகிறோம், நாளை நாள் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை என்று உறங்கிவிட்டாள் அவள்.
ஓகே பிரண்ட்ஸ், இந்த ஸ்டோரி உங்களுக்கு இம்ப்ரெஸ் பண்ணிருந்த மீதி கதையையும் படிக்குற ஆர்வம் இருந்தா ப்ளீஸ் கமெண்ட்ஸ் பண்ணுங்க ,
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி !