தமிழி

பெருமதில்கள் கொண்ட அரண்களைத் தாண்டி
நுரை தள்ளும் குதிரையில் வியர்த்து விறுவிறுக்க
வேகமாக வருகிரான் தமிழ் வீரனொருவன்
அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனிடம் பதற்றத்துடன்
தமிழினத்திற்கே ஆபத்து, கோட்டை நமதை
முற்றுகையிட்டு கைப்பற்ற வருகிறார் எதிரிகள் பலரும்
எனக்கூறி அவனும் கும்பிட்டு அகன்றான்

தமிழனித்தின் எதிரிகளின் இரத்தத்தை குடித்திட
ஏங்கும் பட்டைத்தீட்டிய வாட்களை உடனெடுத்து
பட்டறையில் பளபளக்கும் ஆயுதங்களை கையேந்தி
மறவர் வேள்வியில் பூசை செய்து படையலிட்டு
அரசனை அனுமதிக்க, அரசனும் தன்னறையில்
பால்மணம் மாறா மகனை இன்புடன் தழுவி
நாட்டை காத்திட, போருக்குப் புறப்பட்டான்

அன்புடன் அரசி கணவன் கால் வணங்கி
கவசமணிவித்து, போர் வாளைக்கீரி
பொங்கி வரும் தன் விரலின் உதிரத்தால்
வீரத்திலகமிட்டு, திருஷ்டி கழித்து
உணவின்றி நானும் கண்விழித்துக் காத்திருப்பேன்
வெற்றியோடு நீயும் வீடு திரும்பும் வரையென
தமிழியும் அன்புடனே வழியனுப்பி வைக்கிறாள்

யானைகள் பிளிற, சங்கநாதங்கள் ஒலிக்க
சேனையர் கரகோஷம் விண்ணைப்பிளக்க
எதிரிகளை அச்சமுறச்செய்யும் பேரிகைகள் ஓசை
நாற்புறமும் எதிரொலிக்க, துந்துபி முழங்க,
அரசனும் ஒருமுறை சாரளத்தை நோக்குகிறான்
தமிழ் காத்திட, மரபு வளர்ந்திட,
தலைவனுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்திட்டாலென
தானுமே கவசம் பூட்டி, வளேந்தி, போர்கோலம் பூண்டு
கையசைத்து விடை தந்தாள் வீர மனைவியும்!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (15-Jun-16, 8:38 pm)
Tanglish : tamili
பார்வை : 57

மேலே