பெண்ணின் ஆதங்கம்

மனைவி என்பவள்
மஞ்சத்தில் தாசியைப் போல
இருக்க வேண்டுமாம்!

வேண்டும் போதெல்லாம்
அவள் உடலைத் தரவும் வேண்டுமாம்
உள்ளம் அங்கு தேவையில்லை!

அவன் தீராத விளையாட்டுப் பிள்ளையாம்,
இரவில் அவன் கற்பனைகள் ஏராளம்,
வானில் பறக்கும் பட்டம் போல!

படுக்கையறைப் பாவையாகக்
கருதப்பட்ட நாம் அவர்களுடன் இருப்பதோ
நம் கடைசி மூச்சு உள்ளவரை!

அவர்களுக்கு நம் அன்பை
அறிந்திடவும் உணர்ந்திடவும்
அவசியமும் இருந்தது இல்லை!

நாம் மட்டும் ஏகபத்தினியாய்
அவர்களுக்கு இருந்திருக்க
வேண்டுமாம் புறாவைப் போல!

உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாக
இருந்து அவர்கள் பேச்சைக் கேட்கும்
நாம்தான் முட்டாள்கள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-16, 9:13 pm)
Tanglish : pennin aathankam
பார்வை : 145

மேலே