கடைசி ஆசை

காரிருள் சூழ்ந்த
கனவினைப்போல் உயிர்கள்
கண நேரத்தில் பிரியும்
விதியென்ன?
தேகம் தீயில்
தீய்ந்துவிடும் தேய்ந்துவிடும்
தேய்வதில்லை மனதில்
தேக்கிய ஆசைகள்
முடிவே அறியா பாதையொன்று - அதில்
முடிந்தவரை நம் பயணமுண்டு
முடியும் நேரம் அழுவதுண்டு
முறிந்துபோன நம் ஆசைகள் கண்டு
நித்திரையை நிதமும் கொன்றோம்
நித்தம் பல கனவு கண்டோம்
எத்தனிக்கும் வேளையிலே
எம் கனவுகள் மட்டுமிங்கு தனிமையிலே
எரியும் சிறு தீபமொன்று - அது
அறியும் ஆசை நிலையற்றதென்று
எரியும் வரை எரிவதுண்டு - பின்
அனைவதுண்டு காற்றில் அலைந்துகொண்டு
மனிதன் தினம் ஓடுகின்றான் - ஆசை
கணிதம் பல போடுகின்றான்
விடையைத்தேடி விரைகின்றான்
விதியின் கணிதம் விளங்காமலே
அன்னை முகம் பார்க்கவேண்டும் - முதல்
ஆசை கொண்ட அழகிய சிசு
அன்னை மட்டும் அதன் முகம் பார்க்க
முதல் ஆசையே கடைசி ஆசையாய் போனது.....