நற்பண்புகளை வளர்

தனியொருவரின் உணர்வுகளும்
எண்ணச் சிதறல்களும் ஒருங்கிணைந்து - அங்கே
நற்கவிதை பிறக்கிறது!

இளவயது ஆண் பெண்களிடையே ஏற்படும்
முதிர்ச்சியற்ற இனக் கவர்ச்சி - இன்னொரு
முறையற்ற உயிரை உலகுக்குத் தருகிறது!

போதையுடன் காமம் சேர்ந்தால்
மிருக உணர்வுள்ள கயவர்களை - தகாத
பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுகிறது!

பேராசையும் பதவி மோகமும் சேர்ந்தால்
தீராத ஊழல் பெருகி நமது – நாடு
முன்னேற்றம் அடையாமல் தடுமாறுகிறது!

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. குறள் - 930 கள்ளுண்ணாமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-16, 9:55 pm)
பார்வை : 600

மேலே