ஆனந்தம்

நேற்றைய உங்களின் இறந்தகாலம்
நாளைய எங்களின் பசுமைக் கோலம்

தொலைத்துவிட்டுத் தவிக்கும்
உங்கள் வசந்தகாலத்தை
எடுத்துக்கொண்டு குதிக்கிறோம்

கையில் எதுவுமற்று
சந்தோசமாய் இருக்கும் நாங்களும்
கையில் எல்லாம் வந்தபின்னும்
இந்தக் காலத்தை தொலைத்திருப்போம்
ஒருநாள் ..

நாளைய துக்கத்தை ஆராய்ந்து
இன்றைய சந்தோசத்தை தொலைக்கும்
சங்கடம் எங்களிலில்லை
அதுவரை ஆனந்தம் என்பதைமட்டும்
சிலாகிப்போம் வாருங்கள்
எங்களின் மூங்கில் காட்டோரம்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Jun-16, 3:45 am)
Tanglish : aanantham
பார்வை : 383

மேலே