என் நண்பன்

காதல்...
யாவருக்கும் பொதுவே,  நமக்குள் மட்டும் ஏனோ சிறப்பு பெற்றது உன்னால்!
வரையறை இல்லா காரணத்தினாலோ என்னவோ, அளவில்லாமல் கொட்டி தீர்த்தாய்!
திரும்பும் திசை எங்கும் உன் நினைவுகள் தந்தாய், நினைக்கும் பொழுதெல்லாம் கர்வமும் கொண்டேன்!
உரக்க சொல்வேன் உலகம் கேட்க, என்னைத் தவிர யாவரும் துர்பாக்கியசாலிகள் என்று!
விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை, கடவுளே கை நீட்டி நின்றாலும்!
மறு ஜென்மம் ஏதும் வேண்டாம் இழக்க கூடும் உன்னை, இவ்வொரு ஜென்மம் போதும் இப்படியோரு நண்பனோடு...

என் நண்பனுக்கு சமர்பணம்

எழுதியவர் : மலர் (16-Jun-16, 8:32 pm)
சேர்த்தது : Malar Devi
பார்வை : 1447

மேலே