ஞாயிறு மல்லிகை பிரபஞ்சம்

மல்லிகை மொட்டும்
ஞாயிறும்
என் தோழிகள்

மல்லிகையும்
வாசமும்
பிரிக்க முடியாது
எந்நாளும்

ஞாயிறு அவள்
திங்கள் பெண்ணாகிறாள்
வெயிலிலும்
மழையிலும்
நிலை கொண்டிருக்கிறாள்
மனம் எனும் வானத்தில்

ஞாயிறு மல்லிகையை
வாடவிடாது
மல்லிகையோ
வாடையை வீசிவிடும்

திங்கள் பெண்ணும்
தான் ஒரு பெண் என்பதை மறந்து ரசித்திடுவாள் ஞாயிறை

ஞாயிறு சுதந்திர காற்றில்
மனம் வருடும்
மல்லிகை வாசம்
ஆளை மெய்மறக்க செய்யும்

பிரபஞ்சத்தின்
புதுதேடல்
உயிர்தேடல்
ஞாயிறு பெண்ணும்
மல்லிகை மொட்டும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Jun-16, 7:36 am)
பார்வை : 236

மேலே