மராத்தானும் அப்புவின் லாஜிக்கும்

மராத்தானும் அப்புவின் லாஜிக்கும் ..

அப்புவைக் கூட்டிக்கொண்டு ஞாயிற்றுக் கிழமை காலையில் தாத்தா வெளியில் சென்றபோது, சாலையில் பலர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்து அப்பு தாத்தாவிடம், "தாத்தா இவங்க எல்லாம் என் அப்பாவோடு ஃபிரண்ட்ஸ். ஏன் ஓடறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா ன்னு கேட்டான்.

"ஓ .. தெரியுமே" ன்னு தாத்தா சொன்னாரு. "சொல்லுங்க" ன்னு அப்பு சொன்னதும் தாத்தா, "இவங்க எல்லாம் மராத்தான் ஓட்டம் போறாங்க. யாரு முதல்ல வராங்களோ அவங்களுக்கு வெள்ளிக் கோப்பை பரிசா கிடைக்கும்" ன்னு சொன்னாரு தாத்தா.

அதற்கு அப்பு, "தாத்தா .. அப்போ பரிசு எங்க அப்பா வுக்குத் தான் நிச்சயம் கிடைக்கும்" ன்னு சொன்னான்.

"உங்க அப்பாவும் இதுல ஒடறாரா" ன்னு கேட்டார் தாத்தா.

அப்பு உடனே, "எங்க அப்பாவோட ஃபோன் நம்பர் உங்ககிட்ட இருக்கே. எங்க அப்பாவுக்கு ஃபோன் போடுங்க. அவரும் ஒடறாரா ன்னு தெரிஞ்சுக்கலாம்" என்றான் அப்பு.

தாத்தாவும் அவனை சந்தோசப் படுத்துவதற்கு வேண்டி, அப்புவோடு அப்பாவிற்கு ஃபோன் செய்து மராத்தானில் அவர் பங்குகொண்டிருக்கிறாரா என்று கேட்க, அவர் இல்லையென்று பதிலளித்தார். இருந்தாலும், அப்புவிடம் அவன் தந்தை மராத்தானில் பங்குகொள்ளவில்லை என்ற உண்மையை சொல்லாமல், "உங்க அப்பாதான் ஜெயிப்பாரு ன்னு எப்படி சொல்லறே" ன்னு கேட்டாரு.

"தாத்தா, நேத்திக்கு எங்க அப்பா அவருடைய ஃபிரண்ட்ஸ கூட்டிண்டு வீட்டுக்கு வந்தாங்க. எல்லாருக்கும் காஃபி, டிஃபன் செய்து கொண்டுவா ன்னு அம்மாவிடம் சொன்னாரு. அதுக்கு எங்க அம்மா சத்தம் போட்டு இத்தன பேருக்கு என்னால டிஃபன் எல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லி, அவங்ககிட்ட முன்னமே கேட்காம ஏன் எல்லாரையும் கூட்டிவந்தீங்கன்னு திட்டினாங்க.

எங்க அப்பா உடனே வீட்டுலேந்து வெளிய ஓடிட்டாரு. வந்தவங்களும் அம்மா சொன்னத கேட்டு அப்பா பின்னால ஓடிடாங்க. எங்க அப்பாதானே மொதமொதல்ல ஓடினாரு. அதனாலத் தான் சொல்லறேன் தாத்தா .. எங்க அப்பா தான் ஓட்டப் பந்தயத்துல ஜெயிப்பாருன்னு சொல்லி .. இப்போ தெரிஞ்சுதா .. தாத்தா" ன்னு கேட்டான்.

தாத்தாவும் வேறு வழியின்றி தெரிஞ்சுதுன்னு சொல்லற மாதிரி தலையை ஆட்டினார்.

எழுதியவர் : (17-Jun-16, 11:32 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே