என்னது கல்லுப்பன்னா, அல்லுப்பன்னா, சில்லுப்பாவா
என்னது கல்லுப்பன்னா, அல்லுப்பன்னா, சில்லுப்பாவா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
(பொறுமையும் தமிழ்ப் பற்றும் உள்ளவர்கள் தொடர்ந்த வாசிக்கவும். விரும்பினால் பகிர்ந்தளியுங்கள்)
#################################################################################################################
ஏண்டப்பா, எழிலரசா, உனக்கு கல்யாணமாகி மூணு வருசத்துக்கு அப்பறம் ஒரே பொறப்பில உன்னோட மனைவி தங்கத்து தங்ககான மூணு பொண் கொழந்தைங்க பொறந்திருக்காங்கற சேதி கேட்டு இந்த தள்ளாத வயசிலே நம்ம ஊரிலெ இருந்து பாக்க வந்திருக்கேன். எங்கடா, என்னோட மருமகளையும் எந் தங்கப் பேத்திஙக்ளயும் காணோம்.
அம்மா, தங்கத்துக்கு கொழந்தங்க பொறந்து மூணு நாள்தான் ஆகும். நாளைக்கு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருவேன்,
சரிடா. அந்த பிள்ளங்களுக்கு பேருங்கள முடிவு பண்ணிட்டயா?
அதப்பத்தித் தாம்மா யோசிச்சுகிட்டு இருக்கேன். வைக்கற வைக்கற நல்ல அழகான தமிழ்ப் பேருங்களா வச்சிருடா.
தமிழ்ப் பேரெல்லாம் பிள்ளங்களுக்கு வைக்கற இப்பெல்லாம் நாகரிகம் இல்லம்மா. அதனால இந்திப் பேரிங்களத்தான் வைக்கணும். அப்பத்தான் மத்தவங்க நம்மள மதிப்பாங்க.
அப்பிடியா. உங்க சினிமா நாகரிகம், தமிழச் சீரழிக்கற நாகரிகம் அப்பிடி போயிட்டிருக்க. சரி நீ யோசிச்சிட்டு இருக்கற பேருஙகளச் சொல்லுடா எழிலரசா.
அம்மா மூணும் பெண் கொழந்தைங்க. அவுஙக்ளுக்கு கல்பனா, அல்பனா, ஷில்பா –ன்னு பேருங்கள முடிவு பண்ணிட்டம்மா.
என்னது கல்லுபன்னா, அல்லுப்பன்னா, சில்லுப்பா –வா? என்னடா வாயிலெ நொழையாத பேரையெல்லாம் பிள்ளைங்களுக்கு வைக்கறன்னு சொல்லற.
அம்மா நம்ம தமிழ்ல இருக்கற கற்பனைதான் வடமொழிக்குப் போயி கல்பனா –ன்னு மாறிருச்சு, சிற்பம் அங்க போயி ஷில்பா ஆயிருச்சு, அற்பம் அங்க போயி அர்த்தமும் பொருளும் மாறி அல்பனா –ன்னு மாறிப்போச்சு.
சரிடா மகனே. உன்னோட விருப்பம் நீ வளக்கப்போற பிள்ளைங்களுக்கு உன்னோட விருப்பப்படி பேருங்கள வச்சுக்கா. எல்லாம் நல்லா இருந்தா ஆதுவே எனக்குப் போதும்டா மகனே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
(Sanskrit) Kalpana = Imagine;
Idea; Imagination; Fancy, Fantasy , = ஏறுமாறான கற்பனை, கற்பனை செய்தல், கற்பனைத் திறன்., மனக்கண் வடிவம்
கல்பநா; ಕಲ್ಪನಾ; કલ્પના; ਕਲ੍ਪਨਾ; కల్పనా; കല്പനാ; ; কল্পনা
Shilpa = Stone; Perfectly created/ ಶಿಲ್ಪಾ; ਸ਼ਿਲ੍ਪਾ; শিল্পা; శిల్పా; ஷில்பா; શિલ્પા; ശില്പാ
கல், நிறைவாக, குறையின்றி உருவாக்கப்பட்ட
Alpana = അല്പനാ; अल्पना; অল্পনা; ಅಲ್ಪನಾ; அல்பநா; అల్పనా; અલ્પના; ਅਲ੍ਪਨਾ
Decorative design; Beautiful = அழகாக செய்யப்பட்ட உருவ வரைபடம்
അല്പനാ; अल्पना; অল্পনা; ಅಲ್ಪನಾ; அல்பநா; అల్పనా; અલ્પના; ਅਲ੍ਪਨਾ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய. செம்மொழி நம்மொழி. சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி.

