அதிராத வானில்

அதிராத வானில்
------------;-----------;;;;---------
-திரு

நீலவானில்
வெள்ளைப்புறாக்கள்
சிறகுபுரட்டி கருநீலங்குழைத்து
விசாலமான விந்தை
சுரக்கும் அகிலத்தில்
நறும்புனல் தேங்கிய
மழலையின்
கண்களில் சாயமடித்தது...

தாகங்களின் சுவாசத்தில்
தண்ணீர் ஊற்றுகிறது
புன்னகைச் சாரல் !
- திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 1:35 am)
பார்வை : 73

மேலே