என்னவாகக் கொள்வது
என்னவாகக் கொள்வது?
----------;-------------------------------
-திரு
பென்சிலைப் பிடித்து
அ'கரம்' பழக்கிவிட்ட போது
உயிர் எழுத்தானாய்
இதயத்தில்...
எட்டாத கரும்பலகையில்
வரையச் சொல்லி
என்னைத் தூக்கி
தோள்களில் சுமந்த
அந்த நிமிடங்களில்
தகப்பனனாய்...
என் குட்டி குட்டி
தவறுகளைச் சுட்டிக் காட்டுகையில்
நண்பன் என்று
நட்பு கொண்டேன்...
நீயே அடித்து
நீயே என்னைக் கட்டிப்பிடித்து
ஆற்றுப்படுத்திய
அந்த நாளில் இருந்தே
அம்மாவாக நினைக்க
ஆரம்பித்தேன்...
பிஞ்சு
விரல்களைக் கொஞ்சி
முத்தமிடும்போது
என் அண்ணனின்
ஸ்பரிசம் உணர்ந்தேன்...
ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கு உன்னை அற்பணி
என்ற வரிகளுக்கு மாறாக
என்னைக் கர்பிணியாக்க
நினைத்தால் என்னவாகக்
கொள்வது இந்த புனித உறவை????
-திரு