காதலுடன் - பாகம் 12

வெற்றிலை
பாக்கு வைத்து
பரிசம் போட்டோம்
அன்று
என் விட்டில்......


பந்தகால் நட்டு
தென்னை ஓலைக் கீற்றிட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
திருமண நிகழ்வு
இன்று
அவள் விட்டில்......


ஆறு முதல்
இருப்பத்தாறு வரை
தாயையும் சேயையும்
விதிகள் பிரிக்கவில்லை...
சதிகள் செய்து
என் தோழியின் தோட்டம்
பிரித்ததை
அன்னையைப் பார்த்ததும் அறிந்தேன்......


பழிவாங்கும் உணர்வு
துளிர் விட்டு
தீயாய் பற்றி எறிந்தது...
எதிரியின் பூவிற்கு
என் கரங்கள் மாலையிட்டன......


தோழி
என் மேல் கொண்ட
ஒருதலைக் காதல்
வெற்றியானது...
என் பழிவாங்கும் படலமும்
ஆரம்பமானது......


காதலை
நீரில் மூழ்க விட்டு
காதலியை
தீயில் கருக விட்டு
தோழியின் மனம் உடைத்து
கொடும்பாவி
பட்டம் பெற்றேன்......


உயிருடன்
நிற்க வைத்து
உடல் கிழித்து
இதயம் அறுத்து
உதிரம் பிழியத் துடித்தாள்...
செய்திக் கேட்டு
காதலி......


ஒரு
பகையைத் தீர்க்க
மூன்று பேரின் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி
வைத்த மூடன் நான்...
கங்கையில் கரைத்தாலும்
கரையாதப் பாவி நான்......

எழுதியவர் : இதயம் விஜய் (18-Jun-16, 8:37 am)
பார்வை : 100

மேலே