காதலுடன் - பாகம் 11
இரு மனங்கள்
இணையும்
திருமணத்தின்
முதல் கட்டம்
எனக்கும் அவளுக்கும்
இந்தப்
பொன்மாலை வேளையில்......
பட்டுச்சேலையில்
அவள் ஒரு பட்டாம்பூச்சி...
சேலையில் தோன்றியவள்
சோலையில் பூத்திடாத
என் செம்பருத்தி......
இமைகளிடம்
விழிகள் வரம் பெற்றதால்
இமைகள்
சிறிதும் அசையவே இல்லை......
கூடியக் கண்களுடன்
சோடிக் கண்களும் பார்க்க
விரல்களில்...
கணையாழி
மாற்றிக் கொண்டோம்
களிப்பில்......
சுமந்த வயிறும்
தாங்கிய நெஞ்சும்
என்னுடன்
இல்லை என்ற வருத்தம்
இதயத்தில்......
திரு நாளும்
குறிக்கப்பட்டது...
மலர்ந்தக் காதல்
மாலையில் சேரும்
பொன்னள் அது......