இழப்புகள் தரும் வலி

அவளின் இதயமெனை நினைக்கின்றனவா
பின்னேன் அவளின் இதழ்களெதை
யெதையோ பிதற்றுகின்றன பேசும் வார்த்தைகள் சம்மந்தா சம்மந்தம் இல்லாதது போல் எனக்கேன் தெரிகின்றன
 
சொந்தம் பந்தம் ஊர் உலகம்
அனைவரும் அறிந்ததே நான் அவளைத்
தான் மணக்கப்போகின்
றேனென்று கிசுகிசுக்கும்
வேளையில் பேரிடியா
 
இவள் திடீரென அம்மாதிரி
எண்ணத்தில் நான் ஒன்றும்
பழகவில்லை என்பாளா
நாலு பேர் மத்தியிலே
நாலும் நாலுவிதம் பேசும்படி
 
தந்தையை இழந்தேன்  சிலநாளிலேயே
தாயையு மிழந்தேன் அவ்வேளையில்
நமக்கு இனி எல்லாமும் இவளே என்று
கணித்த கணிப்பும் தவறாகியதே
 
அப்படிப்பட்டவளை என் இதயம்
இன்னும் ஏன் நினைக்கிறது
வலியால் கோடை மாடு போலெனை
மெலிய வைத்திட்டாள்
 
கல்லும் கரையும் போல்
அவள் சொன்ன சொல்லும்
மறைந்தொழியலாயிற்றே
நீர்க் குமிழிப் போலே
 
காய்ந்து தீய்ந்த புல்லு
மதைக் கேட்டுக் கேளிச்
செய்யுமாப் போலானதே
கோமா தாக்கியது போல்
 
எனக்குத்தந்தாள் வலி
காதலையே தந்தாள் பலி
எனக்கு பிடித்தது கிலி
தெறியவில்லை வேறு வழி
 
நெஞ்சு வலிக்குதடி பஞ்சாய்ப்
பறக்குதடி தனிமரமாய் நின்றேன்
திக்கற்றவன் போல்
 
மானம் போகுதடி வானம் சிரிக்கும்படி
இடி இடிக்குமாப் போல்
நான் இடிதாங்கி இல்லையடி
 
அடியே அஞ்சுகி வஞ்சகி
அரக்க நெஞ்சகி நஞ்சு நீயடி
உன்னிடம் இல்லாத அந்த கேடுகெட்ட
 இதயத்தில் நான் இருப்பது போல்
நம்பினது என் தவறேயடி
 
நின்றன் நேரம் நல்ல நேரமடி
இன்னும் நான் காமுக
ஐயோக்கியன் ஆகாமல்
யோக்கியனானேன்
ஆற்று நீராய் நினைத்து
அள்ளி குடித்திருந்தால்••!
 
உன்  மாதிரி ஒருத்தியை
இந்த ஜென்மத்திலில்லை
எந்த ஜென்மத்திலும் காணா
திருக்கவும்" இழப்புகள் தரும்
வலி"யினை தாங்கவும்  கடவுள்
அருளுவான் போடி

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (18-Jun-16, 2:17 pm)
பார்வை : 214

மேலே