ஆசை
கவிதை எழுத ஆசை எனக்கு
கவிதை எழுத ஆசை
பாடுபொருள் எதுவும் இன்றி
பாடத்தானே ஆசை
குழந்தையாகி
குறும்பு செய்து
(குற்றமிலாமல்)நாளும் வாழ ஆசை
விழுந்து எழும் நீரை
போலே வாழ்ந்து காட்ட ஆசை
ஏக்கம் கொண்ட கண்ணில்
பிரமிப்பை காண ஆசை
வழியில்லா காட்டில்
வாழ்ந்து பார்க்க ஆசை
பச்சை புல்வெளி மேலே
படுத்துக் கிடக்க ஆசை
மணலோடு மணலாய்
நாம் உருள ஆசை
இறைவனின் பாதத்தில்
ஓர் பூவாய் மரிக்க ஆசை
உன்னை எந்தன் மார்பில்
வாங்கிக் கொள்ள ஆசை
உன்னோடு போகும் பாதை
போய்க்கொண்டே இருக்க ஆசை
உடைகளை களைத்துவிட்டு
உனை எந்தன் உடையாக உடுத்திக்கொள்ள ஆசை
என் வயிற்றில்
உன் என் உயிர்களை நிரப்பிக்கொள்ள ஆசை
இரவு நேரத்தில்
நிலவு வெளிச்சத்தில்
ஊரெல்லாம் உறங்க
யாரும் இல்லா இடத்தில்
நீயும் நானும் மட்டும் இருக்க ஆசை
எனை நீ தோளில் தூக்கி கொண்டு நடக்க ஆசை
உன் மடியில் படுத்துக்கொண்டு பயணிக்க ஆசை
சாக ஆசை
எனை நீ ஏந்தி கொண்டு நடக்கையில்
நான் உலகை மறக்க ஆசை
உன்னை முத்தமிட ஆசை
உன்னோடு படுக்கையில்
படுக்கையில் உன் மார்பில் எனை நீ எடுத்து போட்டுக்கொள்ள ஆசை
உன்னோடு தோட்டத்தில் கைகோர்த்து நடக்க ஆசை
நீயும் நானுமாய்
குளிக்க ஆசை
எனக்கு நீ ஊட்டி விடுகையில்
உன் விரல் கடிக்க ஆசை
உனக்கு ஊட்டி விட ஆசை
உன்னை போர்த்திக்கொண்டு துயில ஆசை
உனக்கு போர்வையாக ஆசை
உனக்கு உணவாக ஆசை
உன் தாகத்தை தீர்க்க ஆசை
உன் தோளாக ஆசை
எனக்கு நீ தோள் கொடுக்க ஆசை
எனை நீ பார்த்துக்கொள்ள ஆசை
என் உச்சி நீ முகர ஆசை
உன் வெற்றியில்
உனை கட்டிபிடித்து
முகம் முழுக்க முத்தம் வைக்க ஆசை
உனை என் மனதிலேயே வைத்துக்கொள்ள ஆசை
உன் பாதையில் நடைபோட ஆசை
உன் பாதையாக ஆசை
உன் பாதத்திலேயே மரணிக்க ஆசை
எதுவாக இருந்தாலும் உன்னிடம் தான் முதலில் கூற ஆசை
உன் தாலியை உன் நினைவோடு நெஞ்சில் சுமந்து கொண்டு போக ஆசை
முதலும் நீ எனக்கு
முடிவும் நீ
முடிவில் முதலாக உன் முகம் பார்க்க ஆசை
நாம் இருவரும்
படகேறி
ஒற்றையடி பாதையில்
நடைபோட ஆசை
பாதையின் வழியில்
பூக்களை நுகர ஆசை
பூவை நீ எனக்கு வைத்துவிட ஆசை
நீ என்னை அணைத்து முத்தமிட ஆசை
காளான் வீட்டில் தங்கி இளைபாற ஆசை
ஓயாமல் இருவரும் விளையாட ஆசை
ஆற்று நீரில் முங்கிட ஆசை
ஆதிவாசிகளாகி ஆதாம் ஏவாலாய்
நாம் வாழ ஆசை
பாறை இடுக்குகளில்
பயணம் செய்ய ஆசை
மலைமேல் ஏறி
மாலை பொழுதை கழிக்க ஆசை
கடற்கரையில் அலையோடு
விளையாட ஆசை
உலகம்
நம் உலகம்
நாம் இருவரும் வாழும் உலகம்
ஒருநாள்
எனக்கு மட்டும்
முடியாமல் போக
எப்படியும் போக போகிற
உயிரை
புனிதமாக்க
உன் வாலுக்கு
உயிர்(எனை)கொடுக்க ஆசை
என் உயிர் கொடுக்க ஆசை
இறுதிவரை உயிரில்
உடலில் உன்னை சுமக்க ஆசை
உடலில் உன் பெயரை தாங்க ஆசை
உன்னால் உயிர் வாழ ஆசை
உன்னில் உயிர் போக ஆசை
உன்னையே சுற்றிவர ஆசை
உயிர் போனாலும்
உன்னுடனே இருக்க ஆசை
என் உடலை நீ சுமக்க ஆசை
அதில் நான் கரைந்து போக ஆசை
உன்னில் எனை முழுதாய் இழக்க ஆசை
~ பிரபாவதி வீரமுத்து