யாரை கேட்பது நான் யாரென்று?

தந்தை
பொறுப்பில்லாத திறமைசாலி
என்றார்
என் முதலாளி
திறமையான உழைப்பாளி
என்றார்
சகோதரன்
பிழைக்க தெரியாதவன்
என்றான்
எனது வியாபார
நுட்பத்தைகண்டு வியந்தான்
அதை திருடியவன்
நண்பன் என்னை
நகைப்புக்குரியவன்
என்றான்
என் கிழ் பணிபுரிவோர்
கண்டிப்பான வில்லன்
என்றார்கள்
யாரை கேட்பது
நான் யாரென்று?.................
ஒன்று மட்டும் யார்
என்ன சொன்னாலும்
எல்லா சில காலம்தான்.................