இனிய தந்தையர் தின வாழ்த்துகள் -- நிலை மண்டில ஆசிரியப்பா

கருவைத் தந்து கண்போல் காத்துமாய்த்
திருவாய் நின்றிடத் திடமாய் வீரம்
தந்தவன் கடவுளின் தரத்திலே தகப்பன்
வந்தவன் உடலையும் வருத்தி உண்மைப்
பாசம் தந்துப் பண்பினைப் புகட்டி
நேசம் மிக்க நேர்மை வாழ்வை
அன்புடன் வழங்கிய அறிவின் ஊற்றாய்
என்றனின் வளர்ச்சி எண்ணியே உழைத்தாய் .
உன்றனின் பெருமையை உலகம் போற்ற
வென்றிடும் மகளாய் வெற்றிகள் குவிப்பேன் .
பாரில் நின்புகழ் பரவ நானும்
சீரியப் புகழுடன் சிறப்பாய் வாழ்கவே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jun-16, 12:10 am)
பார்வை : 176

மேலே