பசி - முக நூல் கவிதைகளின் தொகுப்பு 3

என் முக நூல் கவிதைகளின் தொகுப்பு
-------------------------------------------------------------------

ஒவ்வொரு விடியலும்
நேற்றைய இருளைக்
கரைக்கிறது.....
-----
கல்லறை வாசகங்கள்
-------------------------------------
இதையாவது படித்தீர்களே...! நன்றி...!
------ எழுத்தாளன்
இங்கு நான் விதைக்கப் பட்டுள்ளேன்!
------ நம்பிக்கைவாதி
நான் முன்னே செல்கிறேன்..!
------ முற்போக்குவாதி / தலைவன்
உங்கள் விருப்பம், கருத்துக்கள் தெரிவிக்கவும்....
------ முக நூல் கவிஞன்
உஷ்....! சத்தம் போடாதீர்கள்....!
------ அமைதி விரும்பி
நாளை வாருங்கள்!
------ கடன் வாங்கியவன்
உள்ளே நான் தானே..?
------ சந்தேகக்காரன்
-----------------------------------------------

என் கனவுகளுக்கு காவல் கிடையாது...
யார் வேண்டுமானலும் வரலாம்...
ஆனால் இதுவரை நான் அறிந்தவர்கள் சாயலிலேயே வருகிறார்கள்...

என் கனவுகளில் கட்டுப்பாடு கிடையாது...
எல்லாம் எக்குத்தப்பா தாறுமாறா இருக்கும்....
-----

நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த சேறுகள்!!
-----

பணம்....!
புகழ்...!

ஜாதில்லாம்.....
சும்மா...!
-----

மூக்கில் மூடி வைத்து
நாக்கில் ஒரு மாத்திரையிட்டு
போக்கில் போதும் மூன்றென
காதில் கேட்டதில்
சுட்டது மனம்
லகரமென உணர....
------

கண்ணாடி பின் வழியே
பார்த்தேன்...
பிம்பம் நீக்கி
என் முகம் எல்லாம்
மாறியிருந்தது...
இடம் வலமாக.....
------
வீதிவரை வீடு
வீதியில காரு
பாதை இல்ல பாரு
மோதி நீ சாவு...
------
மனிதன் காலடி
பதித்த இடத்தில்
நதிகள் வரண்டு போக
பின்னொரு நாளில்
நதிகள் சல சலக்கும்
சோலைகளில் மனிதச்
சுவடு இராது....!
-------

முழு நிலவு பூரிப்பாய்
சிரித்தது ...
பசித்தவனுக்கு பணியாரம்
போல்.....
கைக்கெட்டாக் கனி
கவிழ்ந்து படுத்தான்....
-----

எழுதியவர் : முரளி (19-Jun-16, 10:05 am)
பார்வை : 154

மேலே