என் பார்வையில் அழகிய தமிழ் மகள்

அழகு தோற்றத்தில் தெரியும் ஒன்றல்ல...
நடத்தையையும், நடவடிக்கையையும் கொண்டு கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று...

உயிரையும், பாசத்தையும் கொடுத்து உலகை பற்றி புரிய வைக்கும் ஒவ்வொரு தாயும் இவ்வுலகின் அழகிய தமிழ் மகள்.

அனுபவ முதிர்ச்சியால் தரும் தந்தையின் அறிவுரையை கேட்டு நடக்கும் தங்கை / அக்காக்கள் தான் அழகிய தமிழ் மகள்.

தாய்க்கு பின் தாயாக வரும் அண்ணி, குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு பக்குவமாய் நடந்து கொள்ளும் அண்ணிக்கள் தான் அனைவருக்கும் இவ்வுலகின் அழகிய தமிழ் மகள்.

நிலையே இல்லாத இந்த உலகில் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடக்கும் மனைவி ஒவ்வொரு கணவனுக்கும் அழகிய தமிழ் மகள்.
தந்தையின் நிலைமையை புரிந்துகொண்டு அடம் பிடிக்காமல் நடந்துகொள்ளும் குழந்தைகள் தான் இவ்வுலகின் அழகிய தமிழ் மகள்.

முற்றும் நிலையில் இருக்கும் வாழக்கையை தொடரும் நிலைக்குள் கொண்டு செல்லும் தோழிகள் இவ்வுலகின் அழகிய தமிழ் மகள்.

காதல் என்கின்ற உணர்வு தொடங்கிய உடன் இரு வீட்டாரின் அனுமதியை பெற முழுமூச்சாய் உதவி செய்யும் காதலிகள் தான் இவ்வுலகின் அழகிய தமிழ் மகள்.

இந்த எழுத்தாளனின் வாசிப்பை படித்து பின், சரியென நினைத்தால்,சரியான தெளிவான அடுத்த கட்ட முடிவை எடுக்கும் எந்த ஒரு பெண்மையும் இந்த இவ்வுலகின் அழகிய தமிழ் மகள் தான்.

எண்ண ஓட்டத்தை எழுத்து நடையில் முடிக்கும் இவன்.

சந்தோஷ் குமார்.ப
பி காம் பட்டதாரி

எழுதியவர் : சந்தோஷ் குமார்.ப (19-Jun-16, 5:49 pm)
பார்வை : 147

மேலே