வாழ்ந்து பார்

இழந்ததை தேடுகின்றோம்
தேடியதை மறக்கின்றோம்

மனமெல்லாம்
கோட்டை கட்டி
ஆளுகையில்
அலை வந்து
அலை வந்து
அடித்ததுவே

ஏன் இந்த மாயை
அலை போல
ஓயாமல்
கரையேறு

நடுக்கடலில்
நடுக்கடலில்
அலை இல்லை
நீ தாண்டி விட்டால்
தாண்டி விட்டால்
தடை இல்லை

அலைகள் ஓய்வதில்லை
மனங்கள்
வீழ்வதில்லை
ஓடு நீ
ஓடு நீ
முன்னேறி


அலைகளோடு அலைகளோடு
ஓடியாடி விளையாடுவேன்
மலைகளோடு
மலைகளோடு
முட்டி முட்டி
முன்னேறுவேன்

அலைகள் என்றால் நுரை
கிளைகள் என்றால்
இலை
விதைகள் என்றால்
நான்
நான் விருட்சமாய் வளர்வேன்
வீதியெங்கும்
தென்றல் அலை வீசுவேன்

அகடு முகடாய்
ஏறி இறங்கும்
வாழ்க்கை

அடங்கி போய்விடாதே
ஆணவம் கொண்டுவிடாதே

ஓர் புள்ளியில்
அலைவரிசையில்
நீயும் நின்றிடுவாய்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Jun-16, 4:56 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 239

மேலே